செய்திகள்

பவானி அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2016-08-26 16:26 IST   |   Update On 2016-08-26 16:26:00 IST
9-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பவானி:

பவானி அருகே உள்ள நசியனூர் அடுத்த வேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பூஜா (வயது 14). இவர் திண்டலில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டார்.

பூஜாவுக்கு 7, 8-ம் வகுப்பு போதே பரீட்சை என்றால் ஒரு வித பதட்டமும் பயமும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதமாக 9-ம் வகுப்புக்கு பரீட்சை வந்தால் எப்படி? எழுவது என்ற பயத்துடனேயே சென்று வந்தாராம்.

இதற்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் மன நல ஆலோசனை கேட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவரது அம்மா மற்றும் தங்கை ஈரோடு மருத்துவமனைக்கு சென்று விட்டார்கள். வீட்டில் யாரும் இல்லை. தனிமையில் இருந்த பூஜா வீட்டில் இருந்த பேனில் தனது துப்பட்டாவில் தூக்கு மாட்டி கொண்டார்.

வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்திருந்த அவரது அம்மா வீடு பூட்டி இருந்ததை பார்த்து கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரம் கதவு திறக்க வில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது மகள் பூஜா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உடனே அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

இது குறித்து சித்தோடு சப்- இன்ஸ்பெக்டர் சஜாதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News