இளங்கோவன் மீது பொய் வழக்கு: இளைஞர் காங்.தலைவரை கட்சியை வீட்டு நீக்கவேண்டும்- ஈரோடு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு:
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் நடந்தது.
மண்டல தலைவர்கள் ஜெயபால், ரவி, திருச்செல்வம், ஜாபர்சாதிக், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் ஜே.சுரேஷ், மாவட்ட மகளிர் தலைவி ஆர்.புவனேஸ்வரி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சின்னசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவர் கே.என்.பாட்சா, செயலாளர் முகமதுஅர்சத் உள்படபலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சோதனைஏற்பட்ட போதெல்லாம் கட்சி தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பொறுப்பேற்று கட்சியை வளர்த்தவர். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசை 3-வது பெரிய கட்சியாக உருவாக்கியவர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன் மற்றும் அவரது கூட்டாளிகளும் நுழைந்து ரவுடித்தனம் செய்தனர். அவர்களை இளங்கோவன் இதுகட்சிகட்டுப்பாட்டை மீறிய செயலாகும் என அறிவுரை வழங்கி உள்ளார்.
ஆனால் அவர் தங்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும், தாக்க முற்பட்டார்கள் என்றும் போலீசில் பொய் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த பொய்யான குற்றச் சாட்டை கூறிய விஜய் இளஞ்செழியனை வன்மையாக கண்டிப்பதோடு அவரை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் இதை வலியுறுத்தி கேட்டு கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.