செய்திகள்

பொம்மிடி அருகே பிடாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு

Published On 2016-08-20 17:35 GMT   |   Update On 2016-08-20 17:35 GMT
பொம்மிடி அருகே பிடாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தினார்கள்.
பொம்மிடி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, சொரக்காப்பட்டி, பண்டாரசெட்டிப்பட்டி, பத்திரெட்டிஅள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்ற பிடாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி கொண்டகரஅள்ளி மாரியம்மன் கோவிலில் கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைதொடர்ந்து கொண்டகரஅள்ளி கரக கிணற்றில் இருந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சக்தி அழைத்தலும், வாண வேடிக்கையுடன் கரகம் கூடும் இடத்திற்கு கரகம், எடுத்து செல்லும் நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து பிடாரியம்மன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

பின்னர் கரகம் மண்டுவிற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. விழாவையொட்டி எருதாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Similar News