செய்திகள்

கோவையில் ரெயிலில் தள்ளி இளம்பெண்ணை கொல்ல முயற்சி?: படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2016-08-20 12:28 GMT   |   Update On 2016-08-20 12:28 GMT
கோவை அருகே ரெயில் தண்டவாளப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க பெண் ரெயிலில் அடிபட்டு தலை மற்றும் வலது கையில் பலத்தகாயத்துடன் உயிருக்கு போராடினார். போலீசார் இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

கோவை:

கோவை வடகோவை ரெயில் நிலையத்திற்கும் கோவை ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ளது கிக்கானிக் பள்ளி.

இந்த பள்ளி அருகே உள்ள ரெயில் தண்டவாளப்பகுதியில் இன்று காலை 19 வயது மதிக்கத்தக்க பெண் ரெயிலில் அடிபட்டு தலை மற்றும் வலது கையில் பலத்தகாயத்துடன் உயிருக்கு போராடினார். அந்த வழியே சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பழனி சம்பவ இடத்திற்கு வந்து குற்றுயிராக மயங்கி கிடந்த இளம்பெண்ணை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் பலத்தகாயம் உள்ளதால் அவரால் பேசமுடியவில்லை. இளம்பெண்ணை ரெயில் வரும்போது யாராவது தள்ளி விட்டனரா? அல்லது ரெயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News