மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
நாகை, திருவாரூர் மாவட்டத்ததை சேர்ந்த அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மாவட்ட தலைவர் திருவாரூர் முருகானந்தம் வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் கு.பாலசுப்பிர மணியன் பேசுகையில் கூறியதாவது;
மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுபடி வருகிற 2-ந்தேதி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் கலந்து கொள்வது. அதில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தனியார் மயம், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தம், ஆகியவற்றை எதிர்த்து, குறைந்தபட்ச ஊதியம், குறைந்த பென்ஷன், பொதுத்துறை பாதுகாப்பு மற்றும் 7-வது ஊதிய மாற்றம், புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட மத்திய-மாநில அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத மத்திய-மாநில அரசுகளின் போக்கை கண்டிப்பது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.