செய்திகள்
சென்னிமலையில் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
கீழ்பவானி பாசன வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்காததை கண்டித்தும், நீர் திறப்பு தேதியினை அறிவிக்க கோரியும் விவசாயிகள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
சென்னிமலை:
கீழ்பவானி பாசன திட்டத்திற்கும், இதர பவானி பாசன திட்டத்திற்கும் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப்படையில் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு தேதியினை அறிவித்த பின்பு மற்ற பாசனங்களுக்கு நீர் திறக்க வேண்டும் என கடந்த ஒரு மாதமாக கீழ்பவானி பாசன விசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காளிங்காரயன் பாசனத்திற்கு அரசு கடந்த 12-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டது இது கீழ்பாவனி பாசன விவசாயிகளை கொதிப்படைய செய்தது.
கீழ்பாவானி பாசனத்திற்கு நீர் திறக்காததை கண்டித்தும், நீர் திறக்கும் தேதியினை அறிக்க கோரியும் நாட்டின் 70 வது சுதந்திர தினமான இன்று சென்னிமலை பகுதியில் கீழ்பாவனி பாசன பகுதியான உப்பிலிபாளையம், பசுவபட்டி, பூச்சக்காட்டு வலசு, ஒட்டவலசு, கே.சி.வலசு, நல்லிக்கவுண்டன்வலசு, சொக்கநாதபாளையம், உட்பட பாசன வாய்க்கால் பகுதிகளில் உள்ள 100-க்கும் அதிகமான வீடுகளில் கறுப்பு கொடி கட்டியுள்ளனர்.
ஊர்களுக்கு செல்லும் முகப்புகளிலும் கறுப்பு கொடி தோரணம் கட்டியும் கறுப்பு கொடி ஏந்தியும் தட்டிகளை பிடித்தும் ஊர்வலமாக விவசாயிகள் ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றினர்.
கீழ்பவானி பாசன திட்டங்கள் 2.75 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனமும், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் வளத்திற்கும் ஆதாரமாக உள்ளது.
அதனால் காவிரி நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கணக்கில் கொண்டு விகிதாச்சார அடிப்படையில் 3 பாசனத்திற்கும் ஒரே காலத்தில் தான் தண்ணீர் திறக்க பொதுப்பணி துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பவானிசாகர் அணையில் இருந்து மூன்று பாசனங்களுக்கும் உரிய பங்கீட்டை வழங்க போதுமான அளவு தண்ணீர் சேமிக்கப்படும் வரை அணையை திறப்பதை ஒத்திவைக்க வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.