செய்திகள்

கோபியில் புதுப்பட சி.டி.க்கள் விற்றவர் கைது

Published On 2016-08-14 17:12 IST   |   Update On 2016-08-14 17:12:00 IST
கோபியில் புதுப்பட சி.டி.க்கள் விற்றவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கோபி:

கோபியில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெரியார் திடல் சென்ற போது அங்கு ஒரு நபர் சந்தே கப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பை இருந்தது.

அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோபி, சிலேட்டர் ஹவுஸ் பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 35) என தெரிய வந்தது. அவரது பையை சோதனை செய்ததில் தமிழ் அகதி, ஜாக்சன்துரை, ராஜாமந்திரி உள்பட 21 புதுப்பட சி.டி.க்களை பறி முதல் செய்தனர்.

Similar News