செய்திகள்

எம்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

Published On 2016-08-10 22:38 IST   |   Update On 2016-08-10 22:39:00 IST
மானாமதுரை அருகே உள்ள எம்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மானாமதுரை:

மானாமதுரை அருகே உள்ளது எம்.கரிசல்குளம். இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 2–ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

நேற்று காலை ஏராளமான பக்தர்கள் மானாமதுரை அடுத்த பார்த்திபனூர் மதகு அணை அருகே உள்ள வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் இந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பறவை காவடி எடுத்து வர, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த முளைப்பாரி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குடி மக்கள் செய்திருந்தனர். முளைப்பாரி திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆனால் கடந்த 100 வருடமாக அமைதியாக நடந்த இந்த திருவிழாவில், இந்த ஆண்டு வெளிநபர்களால் திடீரென பிரச்சினை ஏற்பட்டது.

அதன்பின்னர் நடந்த சமாதான கூட்டத்தில் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று கொள்ளப்பட்டதை தொடர்ந்து போலீசார் அமைதியாக விழா நடந்த அனுமதி கொடுத்த போதிலும், இரவு கலைநிகழ்ச்சிக்கு அனுமதி தரவில்லை என்று அந்தபகுதியை சேர்ந்தவர்கள் புகார் கூறினர்.

Similar News