செய்திகள்
காரைக்குடி அருகே லாரி மோதி விபத்து: வாலிபர் பலி: டிரைவர் கைது
காரைக்குடி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே தேவகோட்டை பகுதியில் உள்ள உமையாண்டவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன். இவரது மகன் தவச்செல்வம் (வயது27). இவர் நேற்று மாலை புது வயலில் இருந்து சாக் கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே வேகமாக வந்த ஒரு லாரி சிக்னல் காட்டாமல் திடீரென திரும்பியது. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த தவச்செல்வம் நிலை குலைந்து லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதினார்.
இதில் லாரியின் பின் பக்கத்தில் இருந்த கொக்கி அவரது முகத்தை கிழித்தது. ரத்த வெள்ளத்தில் கிழே சாய்ந்த தவச்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சாக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியை சேர்ந்த சின்னராஜா என்பவரை கைது செய்தார்.