செய்திகள்
திருப்புவனம் அருகே இடிந்து விழும் நிலையில் தொடக்கப்பள்ளி: மாணவ–மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலம்
திருப்புவனம் அருகே தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் மரத்தடியில் படிக்கும் அவலநிலை உள்ளது.
திருப்புவனம்:
திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்தது பெத்தானேந்தல் பஞ்சாயத்து. இங்குள்ள தொடக்கப்பள்ளியில் சுமார் 50 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளி கட்டிடம் கட்டி 30 வருடங்களுக்கு மேலாகியுள்ளதால் கட்டிடம் மராமத்து பார்க்காததாலும் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கு படிக்கும் சுமார் 50 மாணவ–மாணவிகள் மரத்தடியில் படித்து வருகிறார்கள்.
பள்ளி கட்டிடம் தான் இதுமாதிரி என்றால் அங்கன்வாடி கட்டிடமும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகளை பள்ளிக் கட்டிடத்திற்கு முன்புள்ள இடத்தில் படிக்க வைக்கும் நிலைமை உள்ளது. மாணவ– மாணவிகளின் நலன் கருதி புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.