செய்திகள்
சென்னை விமானத்தில் உள்ளாடையில் மறைத்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல்: ஆந்திர பெண் கைது
சென்னை விமானத்தில் உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்த ஆந்திர பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆந்திராவைச் சேர்ந்த பத்மாவை சோதனை செய்தபோது அவர் உள்ளாடையில் மறைத்து ½ கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும்.
இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து பத்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.