செய்திகள்

அரியலூரில் புத்தக திருவிழா 15-ம் தேதி தொடங்குகிறது: ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2016-07-09 16:42 IST   |   Update On 2016-07-09 16:42:00 IST
அரியலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் 2-ம் ஆண்டு புத்தகத் திருவிழா ஜுலை 24-ம் தேதி வரை நடைபெறும். இந்த புத்தக திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தினர் கடைகள் அமைக்க உள்ளனர். அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான மேற்கூரை தடுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாயின. இந்த ஆண்டு அதைவிட அதிக தொகைக்கு புத்தகங்களை விற்பனை செய்ய புத்தகத் திருவிழா ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவ்விழா அரங்கில் தினமும் பிரபல சிந்தனையாளர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மிகவும் பின் தங்கிய கிராமப்புற பகுதிகளைக் கொண்டது அரியலூர் மாவட்டம் என்பதால் புத்தகத் திருவிழா நடைபெறுவது குறித்து அனைத்து பிகுதகளிலிருந்தும் மக்களை ஈர்க்கும் விதமாக போதிய அளவில் விளம்பரம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு மாரத்தான் ஓட்டம், ஸ்கேட்டிங், பேச்சுப் போட்டி நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் புத்தக திருவிழா தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்பட்டன.

ஆனால் இம்முறை விழா தொடங்க சொற்ப நாட்களே இருக்கும் நிலையில் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாதது குறித்து புத்தகப் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News