செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியா?: ஜி.கே.வாசன் பேச்சு

Published On 2016-07-06 10:16 IST   |   Update On 2016-07-06 10:16:00 IST
ஈரோட்டில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி தேவையா? என்பது குறித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவு செய்யப்படும் என்று ஜி.கே.வாசன் பேசினார்.
ஈரோடு:

ஈரோடு வில்லரசம் பட்டியில் ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 3 மாவட்ட த.மா.கா. கட்சி மண்டல ஆலோசனை கூட்டம் நடந்தது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் தோற்றாலும் எங்கள் கட்சி வலுவாகத்தான் உள்ளது. வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு தான் இருக்கிறது. மேலும் கட்சியின் தொடர் செயல்பாடுகள் குறித்து மண்டல கூட்டங்கள் நடத்தி கொண்டு இருக்கிறோம்.

ஈரோட்டில் நடப்பது 6-வது மண்டல கூட்டம் ஆகும். இன்னும் 6 மண்டல கூட்டங்கள் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தின் நோக்கம் தொடர்ந்து தொய்வில்லாமல் பணியாற்றி கட்சியை மேலும் வளர்ச்சி பாதையில் செல்ல வைப்பதற்கு தான் இந்த கூட்டம் வட்டார, நகர, உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளிக்கும்.

அனைத்து நகர கிராமங்களிலும் த.மா.கா.வுக்கு மக்கள் மத்தியில் பெயர், செல்வாக்கு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணி தேவையா? என்பது குறித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் முடிவு செய்யப்படும்.

சட்டசபை தேர்தல் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கட்சி தொண்டர்கள் த.மா.கா.வுக்கு தூண்களாக இருப்பார்கள்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Similar News