செய்திகள்
சிவகங்கை அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் பணம் பறிப்பு
கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் பணம் பறித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள தாமரைக்கண்மாய் பகுதியை சேர்ந்தவர் போதும்பொண்ணு (வயது45). இந்த பெண் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று இவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் அங்கு வந்தார். அவர் திடீரென கத்தியை காட்டி போதும்பொண்ணுவை மிரட்டினார். மேலும் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி விட்டார்.
இது குறித்து பூவந்தி போலீசில் போதும் பொண்ணு புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.