செய்திகள்

சிவகங்கையில் இன்று மாலை வைகோ பம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்: ங்கேற்பு

Published On 2016-06-30 16:02 IST   |   Update On 2016-06-30 16:02:00 IST
சிவகங்கையில் இன்று மாலை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று சிவகங்கையில் உள்ள ஏ.எம்.கே. திருமண மகாலில் நடக்கிறது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புலவர் சிவந்தியப்பன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இச்செயல் வீரர்கள் கூட்டத்தில் வருகிற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இக்கூட்டத்திற்கான மாவட்ட செயலாளர் புலவர் சிவந்தியப்பன், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் வக்கீல் கார் கண்ணன், நகர செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Similar News