செய்திகள்
சாக்கோட்டை அருகே மனைவி பிரிந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை
சாக்கோட்டை அருகே மனைவி பிரிந்த துக்கத்தில் இருந்த வாலிபர் ஊரணியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே சாக்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட புளியங்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது46). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று குடிபோதையில் சாக்கோட்டை அருகே உள்ள ஊரணிக்கு சென்றுள்ளார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த சுப்பிரமணி ஊரணியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது அண்ணன் விடத்தன் கொடுத்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.