செய்திகள்
காரைக்குடி அருகே தொழிலாளியிடம் பணம் பறிப்பு: லாரி டிரைவர் கைது
காரைக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள புதுவயலைச் சேர்ந்தவர் லோடுமேன் தொத்தன் என்ற ஜாகீர்உசேன் (வயது32). சம்பவத்தன்று இவர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது லாரி டிரைவர் அந்தமான் என்ற புரோஸ்அலி என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500–ஐ பறித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சாக்கோட்டை போலீசில் ஜாகீர்உசேன் புகார் செய்தார்.
இதன்பேரில் சப்–இன்ஸ் பெக்டர் சரவணபோஸ் வழக்குப்பதிவு செய்து புரோஸ்அலியை கைது செய்தார்.