செய்திகள்
கட்சி வலிமைபெற உள்ளாட்சி அமைப்புகளில் அதிக வெற்றி தேவை: ப.சிதம்பரம் பேச்சு
கட்சி வலிமைபெற எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை விட உள்ளாட்சி அமைப்புகளில் அதிகமானோர் வெற்றி பெற்றாக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி:
தமிழ் மாநில காங்கிரசின் மாநில செயலாளரும், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான மாங்குடி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட த.மா.கா.வினர் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
மேலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கிளை செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான ராஜேஷ் கண்ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெள்ளையம்மாள், அமுதா அடைக்கண் ஆகியோரும் காங்கிரசில் இணைந்து கொண்டனர்.
இவர்களை வரவேற்று பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், நீங்கள் காங்கிரசிற்கு வந்துள்ளது புதிய தெம்பையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனக்கு உங்களிடம் வேறுபாடு கிடையாது. 30 ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டம் என்னை தாங்கி பிடித்துள்ளது. கட்சி வலிமை அடைய வேண்டுமென்றால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை விட உள்ளாட்சி அமைப்புகளில் அதிகம்பேர் வெற்றி பெற்றாக வேண்டும் என்றார்.