செய்திகள்

சிவகங்கையில் கார் மோதி போலீஸ் ஏட்டு படுகாயம்

Published On 2016-06-24 22:59 IST   |   Update On 2016-06-24 22:59:00 IST
சிவகங்கையில் கார் மோதிய விபத்தில் மானாமதுரை போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார்.
சிவகங்கை:

மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் பூபதி. இவர் சாக்கோட்டை தேரோட்ட நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கு பஸ்சில் வந்தார். பின்னர் மதுரை முக்கி ரோட்டில் இறங்கிய பூபதி சாக்கோட்டை செல்லும் பஸ்சில் ஏறுவதற்காக நடந்து வந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஏட்டு பூபதியை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் விசாரணை நடத்தி காரை ஓட்டி வந்த இடைய மேலூரைச் சேர்ந்த ரகுபதிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News