செய்திகள்

சூராணம், ஏனாதி, உதயனூர் கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க கிராம மக்கள் மனு

Published On 2016-06-22 22:42 IST   |   Update On 2016-06-22 22:42:00 IST
சூராணம், ஏனாதி, உதயனூர் கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவிடம் இளையான்குடி தாலுகா சூராணம், ஏனாதி, உதயனூர் ஆகிய கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சூராணம், உதயனூர், ஏனாதி ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராம மக்கள் குடிநீருக்கு அந்த பகுதியில் உள்ள ஊருணியை பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது, இந்த ஊருணியில் உள்ள தண்ணீர் தரமற்றதாக மாறி உள்ளது. எங்கள் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராக உள்ளது. இதனால், அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, தற்போது நாங்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தின் வழியாகத்தான் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் செல்கின்றன. எனவே, இந்த 3 கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Similar News