செய்திகள்

பு.புளியம்பட்டி அருகே குடிக்க பணம் தராததால் வாலிபர் தீக்குளித்து சாவு

Published On 2016-06-21 09:40 IST   |   Update On 2016-06-21 09:40:00 IST
பு.புளியம்பட்டி அருகே குடிக்க பணம் தராததால் வாலிபர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள வாலிபாளையம் அரிஜன காலணியை சேர்ந்தவர் சுப்பன். இவரது மகன் பண்ணாரி (வயது 18) .

சம்பவத்தன்று பண்ணாரி தனது மச்சானிடம் குடிப்பதற்கு பணம் கேட்டாராம். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பண்ணாரி வீட்டின் முன் நின்று கொண்டு தன் மேல் மண்எண்ணையை ஊற்றினார்.

பணம் கொடுக்கிறாயா... இல்லையா... என்று மிரட்டியவர் திடீரென தீப்பெட்டியை எடுத்து உரசி பற்ற வைத்தார்.

விளையாட்டாக சொன்னது, வினையாகி விட்டதால் அருகே இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து கூக்குரலிட்டனர்.

அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பண்ணாரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பவானி சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News