செய்திகள்
அனைவரையும் ஒன்றாக இணைக்கும் சக்தி திருக்குறள்: ஈரோட்டில் தருண் விஜய் எம்.பி. நெகிழ்ச்சி
திருக்குறள் இந்திய மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் சக்தியாக திகழ்கிறது என்று தருண் விஜய் எம்.பி. ஈரோட்டில் பேசியுள்ளார்.
ஈரோடு:
கன்னியாகுமரியிலிருந்து ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை தருண் விஜய் எம்.பி தலைமையில் பேரணியாக எடுத்து செல்லப்படுகிறது.
வரும் 29-ந்தேதி இந்த திருவள்ளுவர் சிலை கங்கை நதிக்கரையோரம் நிறுத்தப்படுகிறது.
கரூர் வழியாக வந்த இந்த பேரணி நேற்று மாலை ஈரோட்டுக்கு வருகை தந்தது.
ஈரோட்டில் பேரணி குழுவினருக்கும், தருண் விஜய் எம்.பி.க்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈரோடு செங்கோடம்பாளையத்தில் நடந்த இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட தருண் விஜய் எம்.பி. பேசியதாவது:-
இங்கே இளைஞர்கள் மாணவ-மாணவிகள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி. திருவள்ளுவர் என்ற அற்புத மனிதர் உங்கள் தமிழ்நாட்டில்தான் தோன்றி உள்ளார். நமக்கெல்லாம் திருக்குறளையும் தந்துள்ளார். திருக்குறள் இந்திய மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் சக்தியாக திகழ்கிறது.
உங்கள் தாய்மொழியான தமிழ்மொழியை நேசியுங்கள். உங்கள் கலாச்சாரத்தை போற்றுங்கள். என்னதான் நீங்கள் எல்லாம் ஆங்கில புலமை பெற்றிருந்தாலும் வீடுகளில் தமிழில் பேசுங்கள்.
நான் திருக்குறளையயும் திருவள்ளுவரையும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் தபால்காரனாகவே இருக்கிறேன்.
நான் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் அன்னையின் மகன் என்று கூறுவதில் பெருமை படுகிறேன். பாரத ரத்னா விருதை விட நீங்கள் எனக்கு அளித்த வரவேற்பை மிகப்பெரிய விருதாக கருதுகிறேன்.
இவ்வாறு தருண் விஜய் எம்.பி. பேசினார்.
விழாவில் ஒளிரும், ஈரோடு துணை தலைவர் யு.ஆர்.வி.தேவராஜன், இந்து கல்வி நிலைய தாளாளர் கே.கே.பாலுசாமி, தொழில் அதிபர் டி.நவநீத கிருஷ்ணன், அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.சிவானந்தன், பா.ஜ.க நிர்வாகிகள் என்.பி.பழனிசாமி, ராஜேஷ்குமார், சரவணன், கிருஷ்ணகுமார், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பூசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.