செய்திகள்
இன்று ராகுல் காந்தி பிறந்த நாள்: காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
ஈரோடு:
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் தவைர் ரவி தலைமையில் இன்று காலை ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜை நடந்தது.
அதன்பிறகு கோவில் அருகே கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய்கண்ணா, முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியம், மாதேஷ், மண்டல தலைவர் திருச்செல்வம், பாட்சா மகளிர் காங்கிரஸ் தலைவர் புவனேஸ்வரி, அங்காளபரமமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.