செய்திகள்
ரூ.54 லட்சம் மோசடி: பஞ்சாயத்து தலைவி கணவருடன் கைது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் ரூ.54 லட்சம் மோசடி செய்த பஞ்சாயத்து தலைவியை கணவருடன் போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் நெல்லிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 45). தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி ஆரோக்கியராணி (43). இவர் நெல்லிக்கொல்லை பஞ்சாயத்து தலைவியாக உள்ளார்.
இந்நிலையில் பஞ்சாயத்து நிதியில் இருந்து ஆரோக்கியமேரி, அவரது கணவர் ஜெயராஜூடன் சேர்ந்து 54 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் தாராஈஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவி ஆரோக்கியராணி, ஜெயராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் நெல்லிக்கொல்லை பஞ்சாயத்து நிதியில் இருப்பு எவ்வளவு உள்ளது? பஞ்சாயத்து கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் நடந்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் பஞ்சாயத்து நிதியில் இருந்து 54 லட்சம் ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தாராஈஸ்வரி, சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சக்திகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராணி, ஜெயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.