செய்திகள்
பவானிசாகரில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை
பவானிசாகரில் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானிசாகர்:
பவானிசாகர், அண்ணா நகரை சேர்ந்தவர் முத்து (வயது47). மீனவர். இவரது மகன் பிரகாஷ்(வயது19).
முத்துவின் மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். தற்போது முத்து, மகனுடன் வசித்து வந்தார். பிரகாஷ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
பிரகாஷ் ஒரு மாணவியை காதலித்து வந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பிரகாஷ் சோகத்தில் இருந்தாராம்.
இந்நிலையில் பிரகாஷ் சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டார். இதில் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். காதல் தோல்வியால் பாலிடெக்னிக் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.