செய்திகள்
கோபி அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் லாரி மோதி பலி
கோபி அருகே இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் லாரி மோதி பரிதாபமாக பலியானார்.
கோபி:
கோபி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுதாகரன் (வயது 17). எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். சுதாகரனின் தாத்தா நஞ்சை புளியம்பட்டியில் இறந்துவிட்டார். துக்க காரியத்துக்கு கோபி சென்று கரி வாங்க சுதாகரனும், சூரியாவும் (13) புறப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் குமார் (24) என்பவர் கிரிக்கெட் விளையாட கோபிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சுதாகரனும், சூரியாவும் லிப்ட் கேட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை 6.30 மணியளவில் கோபி அருகே செல்லப்பன் டீ கடை என்ற இடத்தில் வரும் போது அந்த வழியாக வந்த ஒரு லாரி மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதில் செல்லும் வழியிலேயே மாணவர் சுதாகரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே தாத்தா இறந்த சோகத்தில் இருந்த உறவினர்கள் மாணவன் சுதாகரன் விபத்தில் பலியானதை கண்டு கதறி அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது.