செய்திகள்

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகன் விபத்தில் பலி

Published On 2016-06-18 17:20 IST   |   Update On 2016-06-18 17:21:00 IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

முத்தூர்:

ஈரோடு, சூரம்பட்டி அண்ணாவீதியை சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் தினேஷ்(வயது30). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவரது மனைவி ஒட்டன்சத்திரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ் மோட்டார் சைக்கிளில் காங்கேயம்–வெள்ளக் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஓலப்பாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் தினேஷ் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தினேஷ்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இறந்த தினேஷ்சின் தந்தை ஈரோட்டில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

Similar News