செய்திகள்

பேத்தி சீர்வரிசைக்கு வந்த தாத்தா திடீர் மாயம்

Published On 2016-06-17 19:50 IST   |   Update On 2016-06-17 19:50:00 IST
பேத்தி சீர்வரிசைக்கு ஈரோட்டுக்கு வந்த தாத்தா திடீரென மாயமானார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

கேரள மாநிலம் பாலகாட்டில் வசித்தவர் வல்லப்பன் (வயது 67). இவரது மனைவி யசோதா. இவர்களின் மகள் வீடு ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் உள்ளது.

மகளின் மகளுக்கு (பேத்தி) சீர் செய்யும் விழா ஈரோட்டில் நடந்தது. இதில் கலந்து கொள்ள தனது மனைவியுடன் வல்லப்பன் ஈரோடு வந்தார்.

இந்த நிலையில் தனியாக வெளியே சென்ற வல்லப்பன் அதன் பிறகு வீட்டுக்கு வர வில்லை. மாயமானார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரிய வில்லை.

இது குறித்து ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து மாயமான முதியவரை தேடி வருகிறார்கள்.

Similar News