செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள்: கலெக்டர் அறிவிப்பு

Published On 2016-06-16 16:18 IST   |   Update On 2016-06-16 16:18:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள் நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

காரைக்குடி வட்டம் புரண்டி, திருப்புவனம் வட்டம் செம்பூர், தேவகோட்டை வட்டத்தில் புளியால், மானாமதுரை வட்டத்தில் செங்கட்டியேந்தல், திருப்பத்தூர் வட்டத்தில் செவ்வூர், சிவகங்கை வட்டத்தில் பெரியகோட்டைபட்டி, இளையாங்குடி வட்டத்தில் பெரும்பாலை, காளையார்கோவில் வட்டத்தில் பி.உடையரேந்தல் ஆகிய கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

அம்மா திட்ட முகாமில் பொதுமக்கள் ஆவணங்களுடன் மனுக்கள் வழங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News