செய்திகள்

பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத பெண் பிணம்

Published On 2016-06-15 17:30 IST   |   Update On 2016-06-15 17:30:00 IST
தனியாருக்கு சொந்தமான முந்திரி தோப்பு அருகே அடையாளம் தெரியாத பெண் பிணம் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பண்ருட்டி:

பண்ருட்டியை அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் ஓடையின் அருகில் தனியாருக்கு சொந்தமான முந்திரிதோப்பு உள்ளது.

இங்கு முந்திரி பொறுக்க சென்றவர்கள் அழுகிய நிலையில் 60 வயது மதிக்கதக்க பெண் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எப்படி இறந்தார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News