செய்திகள்
மானாமதுரையில் மினி பஸ் மரத்தில் மோதியது: 16 பேர் காயம்
மானாமதுரையில் மினி பஸ் மரத்தில் மோதி விபத்தில் 16 பேர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை:
மானாமதுரையில் இருந்து மணக்குடிக்கு மினி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை கண்ணன் என்பவர் ஓட்டி சென்றார். பஸ்சில் பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
மணக்குடி விலக்கு அருகே பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த பனை மரத்தில் பஸ் மோதியது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பாக பஸ் உரிமையாளர் கதிர்வேல், மானாமதுரை போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.