செய்திகள்
மயிலாடுதுறை அருகே குடிபோதையில் தகராறு - தாக்கப்பட்ட பெயிண்டர் பலி
மயிலாடுதுறை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட பெயிண்டர் சிகிச்சை பலன் இன்றி பலியானார்
வில்லிவாக்கம் :
மயிலாடுதுறை சின்ன கோட்டையை சேர்ந்தவர் வீரய்யா (42). ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ், சுமன் இவர்கள் 3 பேரும் அயனாவரம் ரெயில்வே மருத்துவமனையில் பெயிண்டராக வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ரமேசும், சுமனும் இரும்பு கம்பியால் வீரய்யாவை தாக்கினர். இதில் வீரய்யாவின் மண்டை உடைந்தது. தகவல் அறிந்ததும் ஐ.சி.எப். போலீசார் விரைந்து சென்று வீரய்யாவை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து ரமேஷ், சுமனை கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி வீரய்யா இன்று காலை இறந்தார். இதனால் கொலை முயற்சி, வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.