செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 4பேர் காயம்
ஜெயங்கொண்டம் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் மகன் ராம்குமார் ( வயது 19). இவர் ஜெயங்கொண்டம் முத்துநகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ராம்குமார், அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (67), ஜோதிமகன் தினேஷ்(18), சுப்ரமணியன் மகன் சூர்யா (19) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் எஸ்.ஐ. செல்லமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.