செய்திகள்
ஆண்டிமடம் அருகே வேன் மோதி விவசாயி பலி
ஆண்டிமடம் அருகே வேன் மோதி விவசாயி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஆண்டிமடம் அருகேயுள்ள வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைசாமி மகன் மணிகண்டன் (25). விவசாயி. இவருக்கு சத்யா (23) என்ற மனைவியும், தாரணி (3) என்ற மகளும் உள்ளனர்.
மணிகண்டன் நேற்று மாலை கடைவீதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கினார். பின்னர் பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தபோது, ஜெயங்கொண்டத்திலிருந்து ஆண்டிமடம் நோக்கி சென்ற மினி வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மணிகண்டனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த ஆண்டிமடம் விளந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (60) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.