செய்திகள்

தொரவளூர் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு

Published On 2016-05-27 19:11 IST   |   Update On 2016-05-27 19:12:00 IST
தொரவளூர் டாஸ்மாக் கடையை மூட கோரி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
விருத்தாசலம்:

மணிமுக்தாறு பாசன விவசாயிகள் நலசங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமையில் பரவளூரைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் செந்தில் குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பரவளூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து தொரவளூரில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சென்று படித்து வருகின்றனர்.

தொரவளூர் பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு குடித்து விட்டு வரும் குடிமகன்களால் பள்ளிச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு டாஸ்மாக் கடையை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்டகாலமாக எங்கள் கிராமத்திற்கு விருத்தாசலத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட வில்லை. இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சிர் செந்தில்குமார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Similar News