செய்திகள்

குள்ளஞ்சாவடி அருகே தூக்கில் இளம்பெண் பிணம்: தந்தை போலீசில் புகார்

Published On 2016-05-27 17:12 IST   |   Update On 2016-05-27 17:12:00 IST
குள்ளஞ்சாவடி அருகே மகள் சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்ததின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 24) இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன்– மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு சித்ரா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

அவரது உடலை சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றனர். தகவல் அறிந்து சித்ராவின் தந்தை பழனிவேல் அங்கு விரைந்து சென்றார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக பழனிவேல் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சுடுகாட்டிற்கு விரைந்து சென்று சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. பிரேதபரி சோதனையில் சித்ரா எப்படி இறந்தார்? என்ற நிலவரம் தெரிய வரும்.

Similar News