செய்திகள்
தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாம்பரம்:
சேலையூர் அடுத்த மப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரோசாரியா (27). கடந்த 4 ஆண்டுக்கு முன் இவரைவிட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்துள்ளார். மது பழக்கத்துக்கு அடிமையான ஜான் ரோசாரியா போதையில் ரோட்டில் திரிவார்.
நேற்று இரவு தாம்பரம் மேம்பாலத்தில் மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.