செய்திகள்

பழவந்தாங்கல் அருகே என்ஜினீயர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை

Published On 2016-05-24 14:58 IST   |   Update On 2016-05-24 14:58:00 IST
பழவந்தாங்கல் அடுத்த நங்கநல்லூரில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர்:

பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் ஏ.ஜி.எஸ். காலனியை சேர்ந்தவர் வெங்கடேசுவரன் (32). கம்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தனர்.

அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News