செய்திகள்

ஒரத்வுதநாடு அருகே அரசு பஸ் டிரைவர் மர்ம சாவு

Published On 2016-05-22 16:06 IST   |   Update On 2016-05-22 16:06:00 IST
ஒரத்தநாடு அருகே அரசு பஸ் டிரைவர் மர்மமான முறையில் இறந்தார்.

ஒரத்தநாடு:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒரத்தூரை சேர்ந்தவர் ரவி (48).அரசு பஸ் டிரைவர். இவர் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரத்தநாடு அருகே உள்ள பொன்னாப்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு 9 மணிக்கு மேல் தஞ்சையில் இருந்து பொன்னாப்பூருக்கு பஸ்சை இயக்கி சென்றார். கண்டக்டராக அனந்தராமன் இருந்தார்.

இரவு பஸ்சை அங்கு நிறுத்தி விட்டு அங்குள்ள ஒரு அறையில் டிரைவர்– கண்டக்டர் தங்குவது வழக்கம். நேற்று இரவு ரவி அங்குள்ள அறையில் படுத்து இருந்தார்.

அதே அறையில் கண்டக்டரும் தூங்கி கொண்டிருந்தார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர் டிரைவரை எழுப்பிய போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். அதன் பின்னரே டிரைவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும். அவர் மாரடைப்பால் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மர்மமான முறையில் இறந்த டிரைவர் ரவிக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

Similar News