செய்திகள்

தேர்தலில் விஜயகாந்த் படுதோல்வி: தே.மு.தி.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2016-05-21 15:31 IST   |   Update On 2016-05-21 15:31:00 IST
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வி அடைந்தார். இந்நிலையில் மனமுடைந்த தே.மு.தி.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கொங்கராயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 42). தே.மு.தி.க. கிளைச் செயலாளராக இருந்தார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் படுதோல்வி அடைந்தார். மேலும் தே.மு.தி. க.கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்ததால் சுப்பிரமணியன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் மனமுடைந்த சுப்பிரமணியன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்த சுப்பிரமணியனுக்கு வீரம்மாள் என்ற மனைவியும், விஷ்ணு, திருமூர்த்தி ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Similar News