செய்திகள்

காரைக்குடியில் டாஸ்மாக் உள்ளிட்ட 4 கடைகளில் ரூ.1¾ லட்சம் கொள்ளை

Published On 2016-05-18 10:49 IST   |   Update On 2016-05-18 10:50:00 IST
காரைக்குடி அருகே டாஸ்மாக் உள்ளிட்ட 4 கடைகளில் ரூ.1¾ லட்சம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர்-திருச்சி ரோட்டில் சுப்பிரமணி, முத்து ஆகியோர் தனித்தனியாக அருகிலேயே மொத்த அரிசி கடை வைத்துள்ளனர்.

அதே பகுதியில் உலகநாதன் என்பவர் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இதற்கு அருகிலேயே அரசு டாஸ்மாக்கும் செயல்பட்டு வருகிறது.

நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம ஆசாமிகள் டாஸ்மாக் உள்ளிட்ட 4 கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதில் சுப்பிரமணி கடையில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரமும், முத்து கடையில் ரூ.4 ஆயிரமும், உலகநாதன் கடையில் ரூ.30 ஆயிரமும், டாஸ்மாக்கில் ரூ.4 ஆயிரமும் கொள்ளை போனதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பள்ளத்துதூர் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Similar News