செய்திகள்
கனமழையால் பாதிப்பு: வாக்காளர்களை எதிர்பார்த்து காத்திருந்த அதிகாரிகள்
கனமழையால் வாக்காளர்களை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது முதல் கனத்த மழை பெய்தது. இதனால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. ஆனாலும் சிலர் மழையிலும் வாக்களித்து சென்றனர். மழை காரணமாக ரோடுகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக வேதாரண்யம் வித்யாலம் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு மந்தமாக இருந்தது. வாக்காளர்களை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர்.
வேதாரண்யம் தாயுமானவர் வித்யாலயம் பள்ளி வாக்குச்சாவடி முன் மழை நீர் தேங்கி நின்றது.அதில் நடந்து சென்று வாக்காளர்கள் வாக்களித்தனர்.