செய்திகள்
கம்பம் பகுதியில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
கம்பம் பகுதியில் காதல் ஜோடி இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அவரது மகள் நித்தியா (வயது 16). 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகன் முத்துப்பாண்டி (20) கேட்டரிங் முடித்துள்ளார். இருவரும் உறவினர்கள்.
எனவே இவர்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய இவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். இவர்கள் குறைந்த வயதில் காதலித்ததால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து காதல் வாழ்க்கையை தொடர்ந்தனர். இதனை நேரில் பார்த்த பெற்றோர்கள் மீண்டும் சந்திக்க கூடாது என எச்சரித்தனர்.
எனவே பயந்துபோன காதல் ஜோடி நம்மை எப்படியும் பிரித்து விடுவார்கள் என்று கருதினர். எனவே வாழ்க்கையில்தான் ஒன்றுசேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேர்வோம் என்று தீர்மானித் தனர். அதன்படி இன்று காலை நித்யா–முத்துப்பாண்டி அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர்.
அங்கு அரளி விதையை அரைத்து சாப்பிட்டு விட்டு உறவினர் வீட்டுக்கு வந்தனர். அங்கு வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடினார்கள். அதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிய 2 பேரையும் தூக்கிக் கொண்டு தேனி அரசு கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.