செய்திகள்

மழையில் நனைந்தபடி விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பு

Published On 2016-05-10 18:22 IST   |   Update On 2016-05-10 18:22:00 IST
மழையில் நனைந்தபடி விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
விராலிமலை:

விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் விஜயபாஸ்கர், விராலிமலை சட்டமன்ற தொகுதி, அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட முக்கணாமலைப்பட்டி, புதூர், இராப்பூசல், வெள்ளாஞ்சார், வீரப்பட்டி, இருந்திரப்பட்டி, புங்கினிப்பட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது மழை குறுக்கிட்டது. மழையினை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 5 ஆண்டுகால சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய விஜயபாஸ்கர் முக்கணாமலைப்பட்டி, இராப்பூசல் ஆகிய பகுதிகளில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.320 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவங்கி பணிகள் முடிவுற்றுள்ளது. காவிரி குடிநீர் திட்டத்தினை துவக்கி வைக்க எனக்கொரு வாய்ப்பு வழங்க வேண்டும்.

இத்திட்டத்தினை கொண்டு வந்தது புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். மீண்டும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

வாக்கு சேகரிப்பின்போது அ.இ.அ.தி.மு.க மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News