செய்திகள்
தூத்துக்குடி அருகே வேன் மோதி முதியவர் பலி
தூத்துக்குடி அருகே வேன் மோதி முதியவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முள்ளக்காடு:
ஈரோட்டில் இருந்து திருச்செந்தூருக்கு சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் தபால் நிலையம் அருகே வேன் வந்த போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த முதியவர் படுகாயம் அடைந்தார். அவர் பெயர் விபரம் தெரியவில்லை. அவரது சட்டை காலரில் ஏர்வாடி என்ற முகவரி உள்ளது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்தது குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.