செய்திகள்

நீடாமங்கலம் அருகே போலீசாரை தாக்கிய 5 பேர் கைது

Published On 2016-05-07 17:22 IST   |   Update On 2016-05-07 17:22:00 IST
நீடாமங்கலம் அருகே பொது இடத்தில் மது குடித்ததை கண்டித்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை  அடுத்த தேவங்குடி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டு குமார் ஆகியோர் நேற்றுமுன் தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள டாஸ்மாக்கடைக்கு எதிரில் அதே ஊரை சேர்ந்த வினோத் (26), அன்பரசன் ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலரும் சேர்ந்து போலீசாரை தாக்கினர். இதில் காயமடைந்த நாகராஜ், குமார் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் இன்ஸ்பெக்டர்  அறிவழகன், தேவங்குடி எஸ்ஐ விஜயலட்சுமி ஆகியோர் கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது . இதில் வேலங்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் (23), வினோத் (26), அன்பரசன் (44), இளங்கோவன் (34), குணசேகரன் (45) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 21 பேரை தேடி வருகின்றனர்.

Similar News