வேலூர் ஜெயிலில் தொடர்ந்து முருகன் மவுன விரதம்: நளினி சந்திப்பு ரத்து
வேலூர்:
வேலூர் ஆண்கள் ஜெயிலில் ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அதேபோல் பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினி அடைக்கப்பட்டுள்ளார்.
முருகனும், நளினியும் கோர்ட்டு உத்தரவுப்படி, 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் முருகன் கடந்த சில நாட்களாக மவுன விரதம் இருந்து உள்ளார். சக கைதிகள் உள்பட யாருடனும் அவர் பேசுவது கிடையாது. விடுதலை வேண்டி முருகன் மவுன விரதம் இருப்பதாக கூறப்படுகிறது. மவுன விரதம் இருப்பதால் கடந்த முறை மனைவி நளினி சந்திப்பையும் அவர் தவிர்த்து விட்டார்.
கோர்ட்டு உத்தரவுபடி, நளினியை முருகன் இன்று சந்திக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து மவுன விரதம் இருப்பதால், இந்த முறையும் நளினியுடனான சந்திப்பை அவர் தவிர்த்து விட்டார். ஜெயிலில் முருகன் தொடர்ந்து மவுன விரதம் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.