செய்திகள்

ஆலந்தூரில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

Published On 2016-05-06 15:23 IST   |   Update On 2016-05-06 15:23:00 IST
ஆலந்தூரில் மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்:

ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (36) டான்ஸ்மாஸ்டர். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நண்பருடன் மயிலாப்பூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

ஆலந்தூர் எம்.கே.என். சாலை பரங்கிமலை சுரங்க பாதை அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News