செய்திகள்

செங்கல்பட்டு தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பேன்: வரலட்சுமி மதுசூதனன் பேச்சு

Published On 2016-05-06 12:08 IST   |   Update On 2016-05-06 12:09:00 IST
செங்கல்பட்டு தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பேன் என திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் மறைமலைநகரை அடுத்த ஆப்பூர், சேந்தமங்கலம், குருவன்மேடு, வெங்கடாபுரம், சாஸ்திரப்பாக்கம், கொளத்தூர், வெண்பாக்கம், ரெட்டி பாளையம், கொளத்தாஞ்சேரி, கொங்கனாஞ்சேரி, பாலூர், கரும்பாக்கம், வில்லியம்பாக்கம். ஆத்தூர், வடகால், திம்மாவரம், அண்ணா நகர் உள்பட பல்வேறு கிராமங்களில் கொளுத்தும் வெயிலில் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்று அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், கொளத்தூர், வெண்பாக்கம், வெங்கடாபுரம், சாஸ்திரிப் பாக்கம், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர் ஆகிய பகுதிகளில் தேவையான குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வில்லியம்பாக்கம் அருகே உள்ள பாலாறு பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நான் வெற்றி பெற்றதும் கலைஞர், தளபதி கவனத்துக்கு கொண்டு சென்று இதை நிறைவேற்றுவேன் என்று வரலட்சுமி மதுசூதனன் தெரிவித்தார்.

உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார். உடன் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, முன்னாள் எம்.எல்.ஏ, மூர்த்தி, ஆனந்தன், விவசாய அணி செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஊராட்சி பிரதிநிதி வில்சன் சாம்ராஜ், கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மாணிக்கம், கண்ணன், சிவராஜ், சரவணன், கோதை கண்ணன், சண்முகம், ரவிசங்கர், அரிபாலு, சூசைராஜ், ரமேஷ், சுமன், கலைவாணி, உதயன், வெங்கடாபுரம், ஊராட்சி செயலாளர் தருமன், பிரதிநிதிகள் தெய்வானை, ரவி, குணா, ரங்கநாதன், மேகநாதன் உடன் சென்றனர்.

Similar News