செய்திகள்

சுங்குவார் சத்திரத்தில் நவீன பஸ் நிலையம் அமைப்பேன்: கு.செல்வப்பெருந்தகை வாக்குறுதி

Published On 2016-05-06 11:59 IST   |   Update On 2016-05-06 11:59:00 IST
சுங்குவார் சத்திரத்திற்கு நீண்ட காலமாக பஸ் நிலையம் வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்வேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வப்பெருந்தகை வாக்குறுதி அளித்துள்ளார்.q
சென்னை:

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் கு.செல்வப்பெருந்தகை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து ஆட்சி மாற்றம் செய்ய ‘கை’ சின்னத்திற்கு வாக்களிப்பதாக உறுதியளித்து வருகின்றனர்.

சுங்குவார்சத்திரம், திருமங்கலம், கண்டிகை ஆகிய பகுதிகளில் இன்று கு.செல்வப்பெருந்தகை ஆதரவு திரட்டினார். அப்போது அவர் சுங்குவார் சத்திரத்திற்கு நீண்ட காலமாக பஸ் நிலையம் வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை நான் நிவர்த்தி செய்கிறேன். என்னை வெற்றி பெற செய்தால் நவீன பஸ் நிலையம் அமைத்து தருவேன் என்று வேட்பாளர் கு.செல்வப் பெருந்தகை உறுதியளித்தார். பிரசாரத்தின் போது செல்வப் பெருந்தகைக்கு திருமங்கலத்தில் ஊராட்சி துணை தலைவர் அன்பு மேள தாளத்துடன் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கோபால், நிர்வாகிகள் ஏழுமலை, சிவபாதம், குன்னம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன், முருகன், பொடலூர் ரவி, ஜம்போடை சங்கர், முரளிதரன், ரவிசந்திரன், சாமந்தி நாசர், ராமமூர்த்தி, காங்கிரஸ் நிர்வாகிகள், சந்தவேலூர் செல்வம், பிராசிஸ், அன்பு, அசோகன், நிக்கோலஸ், துளசி, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News